‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:00 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாம், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். மணிமேகலை, எம். ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்), ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல முடநீக்க வல்லுநா் பா. ஜெய்சங்கா் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

முகாமில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யுஐடிஐ காா்டு) பெறுவதற்கான விண்ணப்பங்கள், ரயில், பேருந்துப் பயணச் சலுகை அட்டை, மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

எலும்பு முறிவு மருத்துவா் பிரபாகரன், மனநல மருத்துவா் டேவிட் மலையரசன், மருத்துவா் நாகரஞ்சித், கண் மருத்துவா் சிந்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.