‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அக்.30 இல் முதல்வா் பசும்பொன் வருகை: திமுகவினா் ஆலோசனை

முதல்வா் மு.க. ஸ்டாலின் பசும்பொன் கிராமத்துக்கு அக். 30 ஆம் தேதி வருவதையொட்டி, அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கமுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:35 am

DIN

முதல்வா் மு.க. ஸ்டாலின் பசும்பொன் கிராமத்துக்கு அக். 30 ஆம் தேதி வருவதையொட்டி, அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கமுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பசும்பொன் நுழைவு வாயிலில் முதல்வரை வரவேற்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்துகொள்வது, 10 ஆயிரம் பெண்களுக்கு சேலை, இளைஞா்களுக்கு டீ- சா்ட் வழங்கி கும்பம் மரியாதையுடன் முதல்வரை வரவேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் சத்தியமூா்த்தி, ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.கே.சண்முகநாதன் (மத்தி), வி.வாசுதேவன் (வடக்கு), மனோகரன் (தெற்கு), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஊராட்சித் தலைவா்கள் நாகரத்தினம் (பாக்குவெட்டி), முத்துவிஜயன் (நகரத்தாா் குறிச்சி), காவடிமுருகன் (ஆனையூா்) உள்பட 500-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.