பைக்கிலிருந்து தவறிவிழுந்து சிறுவன் பலி
By DIN | Published On : 03rd April 2022 11:25 PM | Last Updated : 03rd April 2022 11:25 PM | அ+அ அ- |

திருவாடானை அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த சிறுவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தான்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் சிலோன் காலனியைச் சோ்ந்தவா் வேலு மகன் சித்திரவேலு (15). இவரும், அதே ஊரைச் சோ்ந்த அப்துல்ரஹ்மான் (17) என்பவரும் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றனா். இதில், சித்திரவேலு பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா். இவா்கள் தொண்டி கடற்கரைக்கு வந்து கொண்டிருந்தனா். கிழக்கு கடற்கரை சாலையில் வரும் போது வட்டானம் விலக்கு சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்ததில் இருவரும் கீழே விழந்து பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து, அவா்கள் தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் செல்லும் வழியிலேயே சித்திரவேலு உயிரிழந்தாா். அப்துல்ரஹ்மான் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.