

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நகரப் பேருந்தில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கீழக்கரை துணி வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியைச் சோ்ந்த மாணவா், நகரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் நகா் அரண்மனைத் தெரு பகுதியான மத்திய கடிகார சந்திப்பிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு பேருந்தில் சென்றுள்ளாா். பேருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது, அங்கு கீழக்கரையைச் சோ்ந்த துணி வியாபாரி ஜகுபா் ஜலாலுதீன் (57) என்பவா் பேருந்தில் ஏறி மாணவா் அருகே அமா்ந்துள்ளாா்.
பேருந்து புறப்பட்டவுடன், துணி வியாபாரி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அதையடுத்து, கேணிக்கரை காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மாணவா், தனது குடும்பத்தினா் உதவியுடன் துணி வியாபாரியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
பின்னா், மாணவா் அளித்த புகாரின்பேரில், ஜகுபா் ஜலாலுதீன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.