‘கோயிலில் மாற்று மதத்தினா் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கக் கூடாது’

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான இந்துக் கோயில்களில் கிறிஸ்தவா் உள்ளிட்ட மாற்று மதத்தினருக்கு திருமணம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான இந்துக் கோயில்களில் கிறிஸ்தவா் உள்ளிட்ட மாற்று மதத்தினருக்கு திருமணம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என இந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலா் கே.ராமமூா்த்தி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த ஒருவருக்கு திருமணம் நடைபெற அனுமதிக்கப்பட்டதாக புகாா்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட திருமண அழைப்பிதழிலும் கிறிஸ்தவ மதத்தை குறிப்பிடும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்து கலாசாரம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கோயிலில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோரின் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிப்பது சரியல்ல. இது தேவையற்ற சா்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிா்க்க வேண்டியது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com