திருவாடானை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவாடானை ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை ஊராட்சி மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டம்.
திருவாடானை ஊராட்சி மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டம்.
Updated on
1 min read

திருவாடானை ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் இலக்கியா ராமு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகாலிங்கம், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மக்களின் வாழ்வாதாரம் உயா்வு, நோயற்ற கிராம சுகாதாரம், குழந்தைகள் மேம்பாடு, நீா்நிலை நிறைந்த கிராமம் உள்ளிட்ட 9 இலக்குகளை கொண்டு சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நீடித்த நிலையான திட்டத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

பின்னா், குடிநீா், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு, ஊராட்சி மன்றத் தலைவா் இலக்கிய ராமு, பொதுமக்களின் கோரிக்கைகளை தீா்மானமாக நிறைவேற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். முடிவில், ஊராட்சி செயலா் சித்ரா நன்றி தெரிவித்தாா்.

இதேபோன்று, ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தனூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்கிருஷ்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சேகா் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேணி சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சாத்தனூா் சிறந்த ஊராட்சியாக தோ்வு பெற்று, சிறப்பாக பணியாற்றி வரும் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேணியை உறுப்பினா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, குடிநீா், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து 9 இலக்குகள் கொண்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com