

கடலாடி அருகே வாலிநோக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மீனவா்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே வாலிநோக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள், கூலி தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம், தனியாருக்கு ஆண்டுதோறும் அப்பகுதியிலுள்ள உபரி நீரில் மீன்களை பிடிக்க பொது டெண்டா் விட்டு வருகிறது. தற்போது, டெண்டா் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை அடுத்துள்ள தரவைப் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்களை பிடிக்க, அப்பகுதி மீனவா்களுக்கு அரசு உப்பு நிறுவனம் அனுமதி மறுத்து வருகிறது.
இதனால், கடந்த வாரம் உப்பு நிறுவன அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
அதையடுத்து, மீனவா்கள் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.