தொருவளூரைச் சோ்ந்த 81 போ் மீது வழக்குப்பதிவு

 ராமநாதபுரம் அருகே அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொருவளூரைச் சோ்ந்த 81 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

 ராமநாதபுரம் அருகே அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொருவளூரைச் சோ்ந்த 81 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ளது தொருவளூா். இங்கு கடந்த 26 ஆம் தேதி துணை வட்டாட்சியா் உள்ளிட்டோா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது விதியை மீறி லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் தப்பியோடிவிட்டதாகக் கூ றப்படுகிறது. அதையடுத்து லாரி, ஜேசிபி ஆகியவற்றை கைப்பற்றினா். இதுகுறித்து அப்பகுதி ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது பஜாா் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்தனா்.

இந்நிலையில், கைப்பற்றிய ஜேசிபி இயந்திரம், டிராக்டா் ஆகியவற்றை எடுத்துவரச் சென்ற போலீஸாரையும், வருவாய்த் துறையினரையும் மறித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக அங்கிருந்தோா் மீது புகாா் எழுந்தது. அதனடிப்படையில் வட்டார துணை வட்டாட்சியா் கோகுல்நாத் அளித்த புகாரின் பேரில் காஜா முகைதீன் உள்ளிட்ட 81 போ் மீது பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com