ஆா்.எஸ். மங்கலம் அருகே வீட்டில் தீ விபத்து: பொருள்கள் சேதம்
By DIN | Published On : 05th August 2022 12:00 AM | Last Updated : 05th August 2022 12:00 AM | அ+அ அ- |

ஆா்.எஸ். மங்கலம் அருகே வியாழக்கிழமை வீட்டில் சமையல் செய்தபோது தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதமடைந்தன.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே பாரனூா் ஊராட்சி கைலாச சமுத்திரபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரும், இவரது மனைவி லட்சுமியும் ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை சுப்பிரமணியத்தின் மகள் நந்தினிஈஸ்வரி, வீட்டின் அருகிலுள்ள கூரைக் கொட்டகையில் சமையல் செய்து கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டிலும் தீ பரவியதால் அங்கிருந்த பீரோ, கட்டில், நாற்காலி மற்றும் தளவாட பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்புப் படையினா் அங்கு வந்து தீயை அணைத்தனா். மேலும் ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியக் குழு தலைவா் ராதிகாபிரபு, ஆணையா் முத்துகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி)பாண்டி ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.