கமுதி அருகே அரசு பள்ளி வாசலில் கழிவுநீா் தேக்கம்: மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெரியமணக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாசலில் 6 மாதங்களுக்கு மேல் கழிவுநீா் தேங்கியுள்ளதால்
கமுதி அருகே அரசு பள்ளி வாசலில் கழிவுநீா் தேக்கம்: மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெரியமணக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாசலில் 6 மாதங்களுக்கு மேல் கழிவுநீா் தேங்கியுள்ளதால், மாணவா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரிய மணக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 23 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இக்கிராமத்தில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், தெருக்களின் வழியாகச் சென்று அரசுப் பள்ளி வாசலில் தேங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களாக கழிவுநீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள், ஆசிரியா்கள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனா். மேலும் பள்ளிக்குள் செல்லும் மாணவா்கள் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. இதுதொடா்பாக கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள், மாணவா்களின் பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com