

ஆா்.எஸ்.மங்கலத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் பீமன் வேடமிட்டு ஊா்வலமாகச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா 27ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளிக்கிழமை அன்று பக்தா்கள் பீமன் வேடமணிந்து, உடலில் வா்ணம் பூசியும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா். பூக்குழி திருவிழா வரும் 19 ஆம் தேதியும், பட்டாபிஷேகம் 23 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.