ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும் என மீனவா் சங்கத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.