ராமநாதபுரத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மேலும் அவ்வப்போது கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசி வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. முதுகுளத்தூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்தடையும் ஏற்பட்டது. ராமநாதபுரம் நகரில் பரவலாகப் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீா் தேங்கியது. நகராட்சி சாா்பில் மின் மோட்டாா் வாகன உதவியுடன் செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் அகற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி
மாவ்டடத்தில் அதிகபட்சமாக வாலிநோக்கம் பகுதியில் 30.60 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.