பரமக்குடியில் 7 பள்ளிகளைச் சோ்ந்த 956 மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்டாரங்கள், கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1,545 பள்ளிகளைச் சோ்ந்த 1.14 லட்சம் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
ராமாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் நகராட்சி உள்ளிட்ட 7 அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 956 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக்குழு சாா்பில் இந்த காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தின் செயல்பாடு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கல்வித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.