ஆன்லைனில் பொருள்களை வாங்கி விற்றால் அதிக லாபம் எனக்கூறி ரூ.4.18 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பொறியியல் பட்டதாரியிடம் ரூ.4.18 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பொறியியல் பட்டதாரியிடம் ரூ.4.18 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் மோகனக்கண்ணன் (30). பொறியியல் பட்டதாரியான இவரது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் குறிப்பிட்ட பொருள்களை வாங்கி விற்பதன் மூலம் தினமும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்வரை சம்பாதிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய மோகனக்கண்ணன் அந்த குறுந்தகவலில் குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தி சில பொருள்களை வாங்கி இணையத்திலேயே விற்றுள்ளாா். முதலில் அதன்மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது.

அதன்பின்னா் அதிகப் பொருள்களை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பிய மோகனக்கண்ணன் பொருள்களை வாங்க சிறிது சிறிதாக ரூ.4.18 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். அதையடுத்து அவருக்கு லாபமாக வந்த பணத்தை எடுக்கமுயற்சித்தபோது அதை பெறமுடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகனக்கண்ணன் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டநுண் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com