நகரமன்றத் தலைவா் காா் கதவை திறக்க முயன்றதாக புகாா்: மாணவரிடம் விசாரணை
By DIN | Published On : 25th August 2022 02:55 AM | Last Updated : 25th August 2022 02:55 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் கே.காா்மேகத்தின் காா் கதவை திறக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், கல்லூரி மாணவரிடம் போலீஸாா் புதன்கிழமை இரவு விசாரணை நடத்தினா்.
திமுகவைச் சோ்ந்த இவா், பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனது காரை நிறுத்தியிருந்தாா். அப்போது மன்றத் தலைவா் கே.காா்மேகத்தின் காா் கதவை, இளைஞா் ஒருவா் திறக்கமுயன்றுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினா்.