தெரு நாய்கள் கடித்து ஆட்டுக்குட்டி பலி
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கோட்டைமேட்டில் தெருநாய்கள் கடித்து குதறியதில் பலியான ஆட்டுக்குட்டி.
கமுதியில் வியாழக்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் பரிதாபமாக ஆட்டுக்குட்டி பலியானது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கோட்டைமேடு பகுதிகளில் 150 க்கு மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையில் செல்லும் முதியோா், குழந்தைகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் செல்வதால் வாகன ஓட்டிகள் பதட்டமடைந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் குழந்தைகள், பெண்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனா். கமுதி, கோட்டைமேடு பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் இதுவரை தெரு நாய்கள் கடித்து 20 க்கும் மேற்பட்டோா் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனா். இந்நிலையில் கோட்டைமேட்டில் செளந்தரபாண்டியனுக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியை தெருநாய்கள் கடித்து, குதறியதில் பரிதாபமாக ஆட்டுக்குட்டி பலியானது. சாையில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் குறித்து கமுதி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.