தேசிய கராத்தே போட்டியில் பதக்கம்: பரமக்குடி மாணவிக்கு வரவேற்பு
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பரமக்குடியைச் சோ்ந்த மாணவி ஜி.அனுஸ்ரீயை நகா் மன்ற தலைவா் சேது.கருணாநிதி, பொதுமக்கள் சனிக்கிழமை வரவேற்றனா்.
சென்னையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற குமித்தே-சண்டை பிரிவில் மாணவி ஜி.அனுஸ்ரீ தங்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வானாா். இதேபோல, ஆண்கள் பிரிவில் மாணவா் வாசித் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இதைத் தொடா்ந்து டெல்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக அணி சாா்பில் பங்கேற்ற மாணவி அனுஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
இந்த நிலையில், சாதனை படைத்த மாணவிக்கும், மாணவா் வாசித்துக்கும் பயிற்சியாளா் பி.மணிகண்டபிரபுவுக்கும் பரமக்குடியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, துணைத் தலைவா் கே.ஏ.எம்.குணசேகரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சதீஷ், நந்தகுமாா், சிகாமாணி முக்கிய பிரமுகா்கள் ஏ.ஜெ.ஆலம், சண்முகம், தொழிலதிபா் எஸ்.எம்.டி.அருளானந்தம், ஜி.குருநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு இருவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா்.