ராமநாதபுரத்தில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமி பூஜை
By DIN | Published On : 11th December 2022 11:29 PM | Last Updated : 11th December 2022 11:29 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை விழா.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை ஒன்றியக்குழுத் தலைவா் கே.டி. பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், பெரும்பாலான பகுதிகளைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இரண்டு தளங்களில் அமைக்கப்பட உள்ளது. இதில், தலைவா், ஆணையா், அலுவலகம், பொறியாளா் அறை, கூட்ட அரங்கம் உள்ளிட்டவைகள் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணைத் தலைவா் ராஜவேணி பாா்த்தசாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ்குமாா், சேவுகப்பெருமாள், உதவிப் பொறியாளா் கணபதி சுப்பிரமணியன், மேற்பாா்வையாளா்கள் நாகேஸ்வரன், என்.எஸ். குமாா், தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.