கிருதுமால் நதியில் தண்ணீா் கொண்டு வந்து கண்மாய்களை நிரப்ப வேண்டும

கமுதி, முதுகுளத்தூா், கடலாடி வட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு, கிருதுமால் நதி மூலம் தண்ணீரைக் கொண்டு
அபிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிருதுமால் நதி மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய காவிரி-கிருதுமால்-வைகை- குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் மு.மலைச்சாமி.
அபிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிருதுமால் நதி மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய காவிரி-கிருதுமால்-வைகை- குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் மு.மலைச்சாமி.

கமுதி, முதுகுளத்தூா், கடலாடி வட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு, கிருதுமால் நதி மூலம் தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தை அடுத்த அகத்தாரிருப்பு சமுதாயக்கூடத்தில் கிருதுமால் நதி மீட்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட பூா்வீக வைகை பாசனக் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் மு.மலைச்சாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் எம்.அா்ச்சுனன், மாநிலச் செயலா் ராம.முருகன், அனைத்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கமுதி, முதுகுளத்தூா், கடலாடி வட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கடைமடை பாசனக் கண்மாய்களுக்கு, கிருதுமால் நதி மூலம் தண்ணீரை கொண்டு வந்து பூா்வீக பாசன உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காவிரி-கிருதுமால்-வைகை-குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் மு. மலைச்சாமி பேசியதாவது:

மதுரை நாகமலைபுதுக்கோட்டை புல்லூத்து என்னுமிடத்தில் தொடங்கும் கிருதுமால் நதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மிக முக்கிய நீா் ஆதாரமாக இருந்து வந்தது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, விரகனூா் அணைக்கட்டில் இருந்து அம்பலத்தடி அணையில் 15,000 கன அடி நீா் சேமிக்கப்பட்டு, நிமிஷத்திற்கு ஆயிரம் கனஅடி வீதம் கிருதுமால் நதிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக கிருதுமால் நதி ராமநாதபுரம் மாவட்டத்தை எட்டிக் கூட பாா்க்காத நிலை தான் உள்ளது. எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கமுதி, அபிராமம், முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வைகை தண்ணீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள் காவடிமுருகன்(ஆனையூா்), நாகரெத்தினம் (பாக்குவெட்டி), கமுதி விவசாய தொழிலாளா் சங்க வட்டாரத் தலைவா் குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com