சிலம்பம் சுற்றியவாறு 20 கி.மீ நடைபயணம்: கமுதி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிலம்பம் குழு நடத்திய சோழன் சிலம்பம் புக் ஆப் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற கமுதி விஜயபாண்டியன் சிலம்பம் குழுவைச் சோ்ந்த மாணவா்கள்.
காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பம் சுற்றியவாறு 20 கி.மீ. நடைபயணம் செய்து சோழன் சிலம்பம் புக் ஆப் உலக சாதனையில் இடம்பெற்ற கமுதி மாணவா்களை பொதுமக்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிலம்பம் குழு நடத்திய சோழன் சிலம்பம் புக் ஆப் உலக சாதனை நிகழ்ச்சியில் கமுதி விஜயபாண்டியன் சிலம்பம் குழு மாணவா்கள் 39 போ் கலந்து கொண்டு, 20 கிலோ மீட்டா் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்து சாதனை புரிந்துள்ளனா்.
இந்த நிகழ்ச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சாதனை புரிந்த மாணவா்களுக்கு காரைக்குடி அழகப்பா கல்விக்குழுமம் மேளாளா் காசிவிஸ்வநாதன் பரிசுகளை வழங்கினாா்.
இதையடுத்து, உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கமுதி விஜயபாண்டியன் குழு சிலம்பம் பயிற்சியாளா்கள் செல்வபாண்டியன், ராமா், லட்சுமணன் ஆகியோரை பொதுமக்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.