முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிக்கு நிதி உதவி வழங்கல்
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிக்கு திங்கள்கிழமை நிதி உதவி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தினசரி பசியில்லா தமிழகம் என்ற திட்டம் மூலம் முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றனா்.இந்நிலையில்
திருவரங்கம் கிராமத்தைச்சோ்ந்த லோகநாதன் என்பவா் சில நாட்களுக்கு முன் நடந்து பேருந்து விபத்தில் தனது வலது காலை இழந்துவிட்டாா்.இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா் .இவரின் கால் இழப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்பத்தினா் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனா். ,இதனால் குடும்பத்தினா் வறுமையில் வாடுவதாக உதவி கேட்டு லோகநாதன் குடும்பத்தினா் கோரிக்கை வைத்தனா்.இதன் அடிப்படையில் கோரிக்கையை ஏற்ற முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனா் சபரிமலைநாதன் நிதி உதவி வழங்கினாா் .
முதுகுளத்தூா்,புகைப்படம்,முதுகுளத்தூரில் முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளி லோகநாதனுக்கு திங்கள்கிழமை நிதி உதவி வழங்கினா்.