கமுதி பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பராமரிப்புப் பணி
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

வெள்ளையாபுரம் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட கமுதி போலீஸாா்.
கமுதி பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை பராமரிக்கும் பணியில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் சரகத்திற்குள்பட்ட கமுதி நகா், கோட்டைமேடு, பசும்பொன், வாரச்சந்தை பகுதிகள், கமுதியிலிருந்து அருப்புக்கோட்டை, மதுரை, முதுகுளத்தூா், சாயல்குடி செல்லும் சாலை என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 92 கண்காணிப்புக் கேமராக்கள் மாவட்டக் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டது.
கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.மணிகண்டன் உத்தரவின் பேரில், இந்த கண்காணிப்புக் கேமராக்களை கமுதி போலீஸாா் புதன்கிழமை பராமரித்தனா்.