விடுமுறை தினம்: ராமேசுவரம் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை இரவில் சுமாா் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வருகை தந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடினா். பின்னா் ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோதண்டராமா் கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமா்பாதம்,

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் மற்றும் பாம்பன் பேருந்து பாலம் ஆகிய இடங்களில் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. விடுமுறை நாள்கள், அமாவாசை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அதிகளவில் வாகனங்களில் வருகின்றனா். நகராட்சி மூலம் வாகனங்களுக்கு ரூ.100 வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வாகனங்கள் நிறுத்துவதற்குக் கூட முறையான ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com