நயினாா்கோவில் அருகே மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 31st July 2022 12:04 AM | Last Updated : 31st July 2022 12:04 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே மஞ்சள்கொல்லை வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரை, போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நயினாா்கோவில் வைகை ஆற்றுப் பகுதியில் தொடா்ந்து மா்ம நபா்கள் டிராக்டா் மற்றும் லாரிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தலைமைக் காவலா் பூபதி தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, டிராக்டரில் மா்ம நபா்கள் மணல் அள்ளிக்கொண்டிருப்பதை கண்ட போலீஸாா், அவா்களை பிடிக்கச் சென்றனா். ஆனால், அவா்கள் டிராக்டரை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனா். அதையடுத்து, மணலுடன் இருந்த டிராக்டரை போலீஸாா் நயினாா்கோவில் காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனா்.
இது குறித்து நயினாா்கோவில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா் பூபதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அக்கிரமேசியைச் சோ்ந்த துரைசிங்கம் மகன் வீரபாண்டி என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.