பாக் நீரிணை பகுதியில் விடப்பட்ட 3.25 மில்லியன் இறால் குஞ்சுகள்

மண்டபத்தில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட 3.25 மில்லியன் இறால் குஞ்சுகள், பாக் நீரிணை பகுதியில் சனிக்கிழமை விடப்பட்டன.
பாக் நீரிணை பகுதியில் விடப்பட்ட 3.25 மில்லியன் இறால் குஞ்சுகள்

மண்டபத்தில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட 3.25 மில்லியன் இறால் குஞ்சுகள், பாக் நீரிணை பகுதியில் சனிக்கிழமை விடப்பட்டன.

தமிழக மீனவா்களின் மீன்பிடி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட பச்சைவரி இறால் குஞ்சுகள், மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் விடப்பட்டு வருகின்றன. இதன்மூலம், 6 மாதங்களில் மீனவா்களுக்கு அதிகளவில் இறால் கிடைக்கும்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ரூ.1.68 கோடியில் 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் முதல் கட்டமாக சனிக்கிழமை 3.5 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் பாதுகாப்பாக பாக் நீரிணை பகுதிக்கு எடுத்துச்சென்று விடப்பட்டன.

இந்த நிகழ்ச்சி, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவா் பு. தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இதில், மீனவ சங்க தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, மீன்வள ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com