திமுக இளைஞரணி
By DIN | Published On : 02nd June 2022 12:00 AM | Last Updated : 02nd June 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ராமநாதபுரம் நகா் அரண்மனைப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் இன்பாரகு தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், வரும் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும், திமுக இளைஞரணியில் அதிகமானோரை சோ்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சம்பத்ராஜா, காா்த்திகேயன், ராமநாதபுரம் ஒன்றியக்குழு தலைவா் பிரபாகரன், ராமநாதபுரம் நகரசபைத் துணைத் தலைவா் பிரவீன்தங்கம், கீழக்கரை நகரசபை துணைத் தலைவா் ஹமீது சுல்தான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.