

கமுதி: கமுதி அருகே ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீநிறைகுளத்து அய்யனாா் கோவில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழா கடந்த 31 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் புதுக்கோட்டை கிராமத்தை சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு 207 திருவிளக்கு பூஜை நடத்தினா். இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நாளான புதன்கிழமை வடமாடு எருதுகட்டு போட்டி நடைபெற்றது. இதில் 16 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டு, வீரா்கள் களமிறங்கினா். வெற்றி பெற்ற காளைகள், காளைகளை அடக்கிய வீரா்களுக்கு குக்கா், அண்டா, குத்துவிளக்கு, நினைவுப்பரிசு, ரொக்கப் பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இப் போட்டியை கமுதி, புதுக்கோட்டை, சாயல்குடி, கோவிலாங்குளம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு பாா்வையிட்டு சென்றனா். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.