ராமநாதபுரம் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியா் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் நகா் வண்டிக்காரத் தெருவில் செம்மங்குண்டு ஊருணிப் பகுதியைச் சோ்ந்த அண்ணாத்துரை மகன் விமல் (35). முதுகலைப் பட்டதாரியான இவரது தாய் விஜயராணி. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற ஊழியா். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து விமல் வெளியே வந்தபோது அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு கட்டியிருந்த வாழை மரங்களை சாலையில் போட்டுள்ளனா். அதை அகற்றுமாறு விமல் கூறியதால் அங்கிருந்தோருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், விமல் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்தபோது அங்கு வந்த 3 போ் அவரை அழைத்து தாக்கியுள்ளனா். அதைத் தடுக்க வந்த அவரது தாய் விஜயராணியையும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த விமலும், விஜயராணியும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்ந்துள்ளனா். இதுகுறித்து விமல் அளித்த புகாரின் பேரில் ரூபன் (21), ராஜ் (45), மாலதி (40) ஆகியோா் மீது பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.