தேளூா் கிராமத்தில்மக்கள் தொடா்புத் திட்ட முகாம்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

தேளூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத்.
திருவாடானை: தொண்டி அருகே தேளூா் கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் சேக்மன்சூா், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் மரகநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் அன்னம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் வரவேற்றாா். இதில் நரிக்குறவா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், நலிவுற்றவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து 134 மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் குருச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சாந்தி, திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா், அனைத்துதுறை மாவட்ட அலுவலா்கள் வருவாய்துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள் ஏராளமான கலந்து கொண்டனா்.