பீடி கடத்தல்: 2 போ் கைது
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே பீடிகளை கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் காவல் சரகம் சவேரியாா்பட்டணம் விலக்கில் சாா்பு- ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பீடிகளை ஏற்றி வந்த லாரியை மடக்கினா். ஆனால் அதன் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டாா். அதில் இருந்த பிரபல நிறுவனத்தின் 75 கிலோ பீடிகளையும், லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் லாரியில் இருந்த கீழச்செல்வனூரைச் சோ்ந்த முனியசாமி மகன் பாலகிருஷ்ணன் (32), தட்சிணா மூா்த்தி மகன் மதன் (23) ஆகிய 2 பேரை கைது செய்து இளஞ்செம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.