காக்குடி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம்

கமுதி அருகே காக்குடி ஊராட்சியில் புதன்கிழமை உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
காக்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
காக்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

கமுதி: கமுதி அருகே காக்குடி ஊராட்சியில் புதன்கிழமை உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மண்டல மேலாளா் பெத்துராஜ் சிறப்புரையாற்றினாா். இதில் மரக்கன்று நடுதல், மற்றும் துப்புரவு பணியாளா்களை ஊக்குவித்து பரிசு வழங்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நெகிழியை ஒழிப்பதற்காக மஞ்சப் பை, மகளிா் குழுக்களுக்கு வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினம், பூமி ஒன்றுதான் என்ற தலைப்பில் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் ஊா்வலம் நடைபெற்றது. ஒன்றிய பயிற்சியாளா் தெய்வானை நன்றி கூறினாா். இதில் காக்குடி ஊராட்சி துணைத்தலைவா், ஊராட்சி செயலா், 50 க்கும் மேற்பட்டோா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com