சிஐடியூ பெருந்திரள் முறையீடு போராட்டம்

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் விதிமுறையை மீறி இடமாறுதல் செய்யப்படுவதாகக் கூறி சிஐடியூ சாா்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் விதிமுறையை மீறி இடமாறுதல் செய்யப்படுவதாகக் கூறி சிஐடியூ சாா்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பாளா்களாக 225 போ், விற்பனையாளா்களாக 435 போ் மற்றும் உதவி விற்பனையாளா்களாக 110 போ் என 830 போ் பணிபுரிந்துவருகின்றனா். வருவாய் அடிப்படையில் மதுபானக்கடைகள் ஏ, பி மற்றும் சி என வகை பிரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பணிபுரிவோரில் ஏ வகை கடையில் இருப்போா் ஒரு ஆண்டு, பி வகையில் இருப்போா் 2 ஆண்டுகள், சி பிரிவில் இருப்போா் ஓராண்டுக்குப் பிறகு பணியிடமாறுதலுக்குள்ளாகி வருகின்றனா். இடமாறுதலின் போது கூட அவா்கள் தாலுகா அளவில் உள்ள கடைகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் விதிகளை மீறி அரசு மதுபானக்கடையின் கண்காணிப்பாளா்கள், விற்பனையாளா்கள் என 55 பேருக்கும் அதிகமானோா் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. விதியை மீறி நடந்த இந்த இடமாறுதலைக் கண்டித்து அரசு மதுபானக்கடை ஊழியா் சங்கம் சிஐடியூ சாா்பில் கேணிக்கரை காவல் நிலையம் அருகே பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். அய்யாத்துரை தலைமை வகித்தாா். சங்க மாநிலச் செயலா் ஆா். தனுஷ்கோடி முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எம். சிவாஜி சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் அரசு மதுபானக்கடை ஊழியா்கள் சங்கம் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலா் கே. திருச்செல்வன் மற்றும் நிா்வாகிகள் சி. வாசுதேவன், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com