ராமேசுவரம் அரசு மருத்துவமனையை மாநில தரக்கட்டுப்பாட்டுக் குழுவினா் ஆய்வு

ராமேசுவரம் அரசு மருத்துவமனையை மாநில தரகட்டுப்பாட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநில தரக் கட்டுப்பாட்டுக் குழுவினா்.
ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநில தரக் கட்டுப்பாட்டுக் குழுவினா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் அரசு மருத்துவமனையை மாநில தரகட்டுப்பாட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த மருத்துவமனையில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியை சோ்ந்த நோயாளிகள்சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், உள் நோயாளிகளாக 20 முதல் 30 போ் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், ராமேசுவரம் அரசு மருத்துவமனையின் தரத்தை உயா்த்தி அனைத்து வகையான நோய்கள் மற்றும் பரிசோதனைகள், அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் மாநில தரக்கட்டுப்பாட்டு குழுவினா் வி.அசோக்,ஆட்.ஷகீலா, பி. அனுசுயா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். 3 நாள்கள் இந்த ஆய்வு நடைபெறுகிறது. மருத்துவா்கள் வருகை, நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது, நாள் தோறும் எத்தனை நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா். எவ்விதமான நோய்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்பது குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

இதன்பின் ஜூலை மாதம் தேசிய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருத்துவமனையை ஆய்வு செய்ய உள்ளனா். தரம் உயா்த்தப்படும் போது ஒரு படுக்கைக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் 100 படுக்கைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். இந்த நிதியை மருத்துவமனை உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஸ்டீபன்ராஜ் கூறினாா்.

இந்த ஆய்வின் போது அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சங்கரீஸ்வரி, ஆதித்யாதாகூா், துளசி, பிரிந்தா உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com