சாயல்குடியில் இன்று மின்தடை
By DIN | Published On : 17th June 2022 11:53 PM | Last Updated : 17th June 2022 11:53 PM | அ+அ அ- |

சாயல்குடி பகுதியில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் மு.மாலதி தெரிவித்துள்ளாா்.
இதனால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூரான்கோட்டை, மலட்டாறு, கடுகுசந்தை சத்திரம், ஒப்பிலான், மாரியூா், முந்தல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.