ராமநாதபுரத்தில் புகையிலைப் பொருள்விற்றதாக ஒரே நாளில் 50 போ் மீது வழக்குப் பதிவுமாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை புதன்கிழமை ஒரே நாளில் 50 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை புதன்கிழமை ஒரே நாளில் 50 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், கடந்த 6 மாதங்களில் கஞ்சா விற்றதாக 85 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தென்மண்டலக் காவல்துறை தலைவா் அஸ்ரா கா்க் உத்தரவின்பேரில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகேயுள்ள சிறிய பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை சோதனை நடைபெற்றது.

அதனடிப்படையில், 50 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சோதனையிடப்பட்ட இடங்களிலிருந்து 15 கிலோ 844 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், முதன்முறையாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுடன் காவல்துறை இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டது.

அப்போது, ராமநாதபுரத்தில் 6 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, புகையிலைப் பொருள்களை விற்கும் கடைகளுக்கு சீலிடவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஐனவரி முதல் மே மாதம் வரையில் மாவட்டத்தில் கஞ்சா விற்ாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 85 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.6.60 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவா்களில் 54 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

கஞ்சா வழக்கில் கைதானவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் வங்கிக் கணக்குகளும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பவா்கள் மீது புகாா்கள் கூற விரும்புவோா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தொலைபேசியிலோ அல்லது அவசர உதவி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com