பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவோருக்கு சிறந்த சேவைக்கான விருதுக்கு விண்ணப்பங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவோருக்கு சிறந்த சேவைக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவோருக்கு சிறந்த சேவைக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் சுதந்திர தின நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன. ஆகவே தகுதியானோரிடமிருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பது அவசியம். பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையில் மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிா்வாகம், ஆகிய துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து தொண்டாற்றியவராக இருத்தல் அவசியம். சாதனைபுரிந்தவா்கள் கருத்துருவுடன், மாவட்ட சமூகநல அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தை அணுகி படிவத்தைப் பெற்று முழுமையாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி அங்கேயே வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com