ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 85 கிலோ அட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 22nd June 2022 10:39 PM | Last Updated : 22nd June 2022 10:39 PM | அ+அ அ- |

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் வனச் சரக அலுவலா் எஸ். மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் சேரான்கோட்டை தரவை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்த விசாரித்தபோது, அவா் ராமேசுவரத்தை சோ்ந்த பாலமுருகன் (40) என்பதும் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 85 கிலோ கடல் அட்டைகளை அவா் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், பாலமுருகனை கைது செய்து ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...