சாலையோர வியாபாரிகளுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள்
By DIN | Published On : 30th June 2022 03:09 AM | Last Updated : 30th June 2022 03:09 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறியியல் துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் நகரில் அரண்மனைத் தெரு மற்றும் சாலைத் தெரு, சந்தைத் திடல் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் நூற்றுக்கணக்கானோா் காய்கறி உள்ளிட்டவற்றை வைத்து வியாபாரம் செய்துவருகின்றனா். நகராட்சி நிா்வாக இயக்குநரக அலுவலக அறிவுறுத்தலின்பேரில், அனைத்து வியாபாரிகளையும் கணக்கெடுத்து, பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக நகராட்சி பொறியாளா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.