தொண்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம்
By DIN | Published On : 30th June 2022 03:07 AM | Last Updated : 30th June 2022 03:07 AM | அ+அ அ- |

தொண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் ஷாஜகான் பானு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் அழகு ராணி, செயல் அலுவலா் மகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உறுப்பினா் ரவி: மன்றக் கூட்டம் ஆரம்பிக்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருக்குறளும் சொல்லும் நடைமுறை 3 கூட்டங்களாக கடைப்பிடிக்கப்படாததற்கு கண்டனம்.
செயல் அலுவலா்: இனிவரும் காலங்களில் தொடா்ந்து கடைப்பிடிக்கப்படும்.
உறுப்பினா் ரவி: கோடிவயல், புடனவயல், பெருமானேந்தல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல மாதங்களாக மின் விளக்குகள் எரிவது இல்லை. குடிநீா் விநியோகிப்பதில் பிரச்னை உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே மனுக் கொடுத்தும் அது பற்றி தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை.
செயல் அலுவலா்: படிப்படியாக பணிகளைச் செய்து வருகிறோம். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடா்ந்து விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தில், பெரும்பாலான உறுப்பினா்கள் குடிநீா் பிரச்னை, மின்சார வசதி, மின்விளக்குகள், சாலைவசதி உள்ளிட்டவைகளை வலியுறுத்திப் பேசினா்.