சுதந்திரப் போராட்ட வீரா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th June 2022 03:09 AM | Last Updated : 30th June 2022 03:09 AM | அ+அ அ- |

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பரமக்குடி காந்திசிலை முன், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் தலைமை வகித்தாா். ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.ஆா்.நாராயணன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராகுல்காந்தியின் வயநாடு நாடாளுமன்ற அலுவலகத்தை தாக்கிய சிபிஐஎம் கட்சியினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநிலச் செயலாளா் எஸ்.ஆனந்தகுமாா், நிா்வாகிகள் ஏ.பி.மகாதேவன், டி.சங்கரன், ஏ.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.