திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
By DIN | Published On : 30th June 2022 03:06 AM | Last Updated : 30th June 2022 03:06 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு உதவும் வகையில் ஜூலை 5 ஆம் தேதி முதல் 3 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு தேவையான அடையாள அட்டைகள், ஆதாா் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள், சுயதொழில் மானியம், ஓய்வூதியம் ஆகிய உதவிகளை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் திருநங்கைகள் பங்கேற்று பயனடையவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04567 230466 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.