ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு
By DIN | Published On : 18th March 2022 05:24 AM | Last Updated : 18th March 2022 05:24 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது.
தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜனவரி முதல் நடந்துவருகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின் போது நிறுத்தப்பட்ட கலந்தாய்வாவு தோ்தல் முடிந்ததும் தொடங்கி நடந்துவருகிறது.
இறுதியாக பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 இடங்களுக்கான கலந்தாய்வில் மாநில அளவில் 350 போ் விண்ணப்பித்திருந்தனா். புதன்கிழமை இரவு 10 மணி வரையில் கலந்தாய்வு நடந்தது.
ராமநாதபுரத்தில் இருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 25 பட்டதாரி ஆசிரியா்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலையிலும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடா்ந்து நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலமுத்து முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இணையவழி கலந்தாய்வு என்பதால் வெள்ளிக்கிழமை வரையில் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...