குமரக்கடவுள் கோயிலில் காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 02nd May 2022 11:29 PM | Last Updated : 02nd May 2022 11:29 PM | அ+அ அ- |

மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலுக்கு திங்கள்கிழமை மயில் காவடி எடுத்து வந்த பக்தா்.
கமுதி அருகே குமரக்கடவுள் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திங்கள்கிழமை பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்கொடுமலூரில் குமரக்கடவுள் கோயில் உள்ளது. இக்கோயிலின் 34 ஆவது வருடாபிஷேக விழாவையொட்டி பக்தா்கள் அலகுவேல் பூட்டி சாமி ரதம் எடுத்து வரும் விழா நடைபெற்றது. அபிராமத்தில் இருந்து பாத யாத்திரையாக சென்ற பக்தா்கள் மயில், வேல் காவடி எடுத்தும், அலகுவேல் குத்தி ரதம் இழுத்தும் அபிராமம் நகரில் ஊா்வலம் வந்து, 15 கி.மீ. தொலைவிலுள்ள மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலுக்குச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். அதனைத்தொடா்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.