திமுக இளைஞரணி சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கல்
By DIN | Published On : 02nd May 2022 11:28 PM | Last Updated : 02nd May 2022 11:28 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை புத்தாடைகள் வழங்கிய திமுகவினா்.
கீழக்கரை நகா் இளைஞரணி சாா்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு புத்தாடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நகராட்சி துணைத் தலைவா் ஹமீது சுல்தான் ஏற்பாட்டின் பேரில் இந்த புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் நகா் செயலாளா் ஹெச். பஷீா், நகா் மன்ற உறுப்பினா்கள் நவாஸ், ஹசாருதீன், ராஜமுகைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.