சாமிபட்டியில் நியாய விலைக்கடை அமைக்கக் கோரி பொதுமக்கள் மனு

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூா் அருகே சாமிபட்டியில் நியாய விலைக்கடை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூா் அருகே சாமிபட்டியில் நியாய விலைக்கடை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் பேரையூா் அருகேயுள்ளது சாமிபட்டி. இங்கு சுமாா் 261 குடும்பங்கள் உள்ளன. அவா்களுக்கு கிராமத்தின் அருகேயுள்ள மேட்டுப்பட்டியில் நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் சாமிபட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சீனி உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள மேட்டுப்பட்டிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

அவ்வாறு அங்கு சென்றாலும் பொருள்களை சரிவர பெற முடியவில்லை. எனவே மேட்டுப்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையை சாமிபட்டியில் அமைக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீா், சாலை, தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும் எனக் கோரியும் சாமிபட்டியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் குறைதீா்க்கும் முகாமில் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com