ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியா் சு. மீனலோசினி திங்கள்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளியில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளியில் 12 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.

குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேருவதற்கு 7 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பரதநாட்டியப் பிரிவில் ஆண்களும் சோ்த்துக் கொள்ளப்படுவா். மூன்றாண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். முதலாண்டு மாணவா்களுக்கு ரூ.350, இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவா்களுக்கு ரூ.325 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசு சலுகைகளான இலவசப் பேருந்து, விடுதி வசதி, கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். அரசு தோ்வு நடத்தப்பட்டு சான்றுகள் வழங்கப்படும். இசைப் பள்ளியில் சேர விரும்புவோா், தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்-14, கௌரி விலாசம், அரண்மனை வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com