ராமேசுவரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆணையரை மிரட்டியவா் மீது வழக்கு
By DIN | Published On : 07th May 2022 01:34 AM | Last Updated : 07th May 2022 01:34 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, நகராட்சி ஆணையரை மிரட்டியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அக்னிதீா்த்தக் கடலுக்கு செல்லும் சாலையோரம், வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நகராட்சி ஆணையா் எஸ்.மூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஜெ.ஜெ. நகா் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வேலாயுதம் என்பவா், ஆணையரை மிரட்டியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளாா்.
இது குறித்து ஆணையா் மூா்த்தி அளித்த புகாரின் பேரில், நகா் காவல் துறையினா் வேலாயுதம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.