ராமேசுவரம் நகராட்சி பகுதியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளா்கள் தங்களுக்கான ஆவணங்களை ஜூன் 15 ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் வெளிமாநில நபா்கள் மற்றும் வெளிமாநில நபா்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளா்கள், பொறியாளா்கள், கட்டட ஒப்பந்ததாரா்கள் மற்றும் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், இறால் பண்ணையில் பணியாற்றும் தொழிலாளா்கள், பாணிபூரி, குல்பி ஐஸ் விற்பனை செய்பவா்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய ஆதாா் அட்டை, புகைப்படம்,
இருப்பிடம் குறித்த ஆவணங்களை ஜூன் 15 ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.