கமுதியில் தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 18th October 2022 12:00 AM | Last Updated : 18th October 2022 12:00 AM | அ+அ அ- |

கமுதியில் தீயணைப்புத் துறையினா் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தீ விபத்து இல்லாத தீபாவளி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஆயிஷாபீவி தலைமையில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்வா் நா்தாகா் பாதுஷா, தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் சந்திரசேகா், பள்ளியின் துணை முதல்வா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு செயல்விளக்கம்
நடைபெற்றது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், எரிவாயு உருளை இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலா் பாா்த்திபன்(போக்குவரத்து), தலைமை தீயணைப்பாளா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...